இஸ்ரோவின் "இளம் விஞ்ஞானி திட்டம்" (YUVIKA 2026): பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானி திட்டம்" (YUVIKA - யுவிகா) என்ற சிறப்புப் பயிற்சி முகாமை அறிவித்துள்ளது. விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை இளம் தலைமுறையினருக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
"இளம் வயதிலேயே கண்டறிதல்" (Catch them young) என்ற அடிப்படையில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த துறைகளில் மாணவர்களை ஊக்குவிக்க இந்தத் திட்டம் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள் (Important Dates)
| வ.எண் | நிகழ்வுகள் | தேதி |
|---|---|---|
| 1 | திட்ட அறிவிப்பு | பிப்ரவரி 20, 2026 |
| 2 | ஆன்லைன் பதிவு தொடக்கம் | பிப்ரவரி 27, 2026 |
| 3 | பதிவு முடிவடையும் நாள் | மார்ச் 31, 2026 |
| 4 | முதல் தேர்வுப் பட்டியல் வெளியீடு | ஏப்ரல் 13, 2026 |
| 5 | 2-வது தேர்வுப் பட்டியல் (காலி இடங்கள் இருப்பின்) | ஏப்ரல் 20, 2026 |
| 6 | யுவிகா (YUVIKA) பயிற்சி நடைபெறும் நாட்கள் | மே 11 முதல் 22 வரை, 2026 |
தேர்வு முறைகள் மற்றும் மதிப்பெண் அளவுகோல்
யுவிகா 2026 திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் கீழ்க்கண்ட அளவுகோல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
| தகுதிகள் / செயல்பாடுகள் | மதிப்பெண் (%) |
|---|---|
| 8-ஆம் வகுப்பு அல்லது கடைசியாக நடந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் | 50% |
| ஆன்லைன் வினாடி வினா (Online Quiz) செயல்பாடு | 10% |
| அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பு (பள்ளி / மாவட்டம் / மாநில அளவில்) | 2% / 5% / 10% |
| ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி (1 முதல் 3 இடங்கள்) | 2% / 4% / 5% |
| விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி (1 முதல் 3 இடங்கள்) | 2% / 4% / 5% |
| சாரண-சாரணியர் / NCC / NSS உறுப்பினர் (கடந்த 3 ஆண்டுகளில்) | 5% |
| பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராமப்புற பள்ளிகளில் படிப்பவர்கள் | 15% |
* ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்தும் குறைந்தபட்ச பங்கேற்பு உறுதி செய்யப்படும்.
பயிற்சி நடைபெறும் 9 இஸ்ரோ மையங்கள்:
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்சிங் (IIRS), டேராடூன்.
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), திருவனந்தபுரம்.
- சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC), ஸ்ரீஹரிகோட்டா.
- யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC), பெங்களூரு.
- விண்வெளி பயன்பாட்டு மையம் (SAC), அகமதாபாத்.
- தேசிய தொலை உணர்வு மையம் (NRSC), ஹைதராபாத்.
- வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் (NE-SAC), ஷில்லாங்.
- இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸ் (IPRC), மகேந்திரகிரி.
- மண்டல தொலை உணர்வு மையம் (RRSC), ஜோத்பூர்.
தகுதி மற்றும் சலுகைகள் (Eligibility & Benefits)
- தகுதி: ஜனவரி 01, 2026 நிலவரப்படி இந்தியாவில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- சான்றிதழ்: பதிவின் போது 'Bonafide Certificate'-ஐப் பதிவிறக்கம் செய்து, பள்ளி முதல்வரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
- பயணச் செலவு: தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான பயணச் செலவை (இரண்டாம் வகுப்பு ஏசி ரயில் அல்லது ஏசி பேருந்து கட்டணம்) இஸ்ரோ வழங்கும். பயணச்சீட்டின் அசல் (Original Ticket) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- உறைவிடம்: பயிற்சி காலத்திற்கான பாடப் பொருட்கள், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை இஸ்ரோ முழுமையாக ஏற்கும்.
0 Comments