DEO முதன்மைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு:
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டிஇஓ முதன்மைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில்
வெளியிடப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி. வெங்கட பிரியா
நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி
குரூப் 1- சி கீழ் வரும் மாவட்ட கல்வி அதிகாரி நேரடி நியமனத்துக்கான
முதன்மைத்தேர்வு மார்ச் 22-ம் தேதி முதல் 25-ம்் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களுக்கு தேர்வுக்கூட
நுழைவுச் சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை தங்களின் ஒருமுறை பதிவு
(ஓடிஆர்) வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
0 Comments