தொடக்க /
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார கல்வி
அலுவலர்கள் தேர்வு நிலை தர ஊதியம் 5400 வழக்கு தீர்ப்பு விரிவான விளக்கம்!
தர ஊதியம் 5400
Grade Pay 5400
தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார
கல்வி அலுவலர்கள் தேர்வு நிலை தர ஊதியம் 5400 வழக்கு தீர்ப்பு
அடிப்படை விதிகளே மேலோங்கும்.(Supremacy of Fundamental Rules): அரசாணைகள் அல்லது
அரசு கடிதங்களை விட, சட்டப்பூர்வமான அடிப்படை விதிகளே (Fundamental Rules)
மேலானவை. விதி 22-B-ல் உரிய திருத்தம் செய்யப்படாமல், ஒரு அரசு கடிதத்தின் மூலம்
ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியப் பயன்களைக் குறைக்க முடியாது.
No Recovery ஆசிரியர்களின் தரப்பிலிருந்து எந்தவிதமான மோசடியோ அல்லது தவறான தகவலோ
அளிக்கப்படாத நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தை
வசூலிப்பது சட்டப்படி செல்லாது
FR 22 B திருத்தப்படாத நிலையில் தணிக்கை தடை நிலுவையில் இருப்பதனால் ,
அரசாணைகளின் படி வழங்கப்பட்ட தேர்வு நிலை ஊதியத்தை குறைத்து AG பென்ஷன் நிர்ணயம்
செய்ய கூடாது.AG எந்த தொகையையும் பிடிக்க கூடாது .FR 22 B திருத்தப்பட்ட பிறகு
பென்ஷன் திருத்தி அமைக்கலாம் .ஆனால் கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடிக்க கூடாது
recovery கூடாது
FR 22 B தான் மேலோங்கும்.அரசு கடிதம் FR 22 B ஐ நீர்த்து போக செய்ய முடியாது .
FR 22 B ன் படி தேர்வு நிலை ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டதை , அரசு கடிதம் மூலம்
ரத்து செய்ய முடியாது.
தர ஊதியம் 5400 ஏமாற்றியோ , தவறான விண்ணப்பம் மூலம் பெறப்படவில்லை என்பதை தணிக்கை
தடைக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் வழங்கிய தெளிவாணை மூலம் உறுதியாகிறது
.அரசாணையின் படி வழங்கப்பட்ட ஊதியத்தை ,மக்களின் வரிப்பணம் என்று காரணம் கூறி
recovery ஏற்றுக் கொள்ள முடியாது.
தற்போதைய வழக்கில்,
FR 22 B ன் படி
1.1.2006 க்கு முன்னர் தேர்வு நிலை/சிறப்பு தரத்திற்கு மாற்றப்பட்ட நபர்கள்
மற்றும்
1.1.2006 க்குப் பிறகு அடுத்த தேதியில் தேர்வு நிலை/சிறப்பு தரத்தில்
திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களைத் தேர்வுசெய்தவர்கள் மற்றும் அவர்களின் பதவி
உயர்வுக்குப் பிறகு, அரசு ஊழியர் அதே அளவு விகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ள
அனுமதிக்கப்படுகிறார்கள். FR 22 B விதி திருத்தப்படாமல், ஊதிய விகிதங்களை
திருத்துவது தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட
தெளிவாணைகளின் அடிப்படையில் ஊதியத்தை குறைக்க முடியாது .அரசு தெளிவாணை கடிதங்களை
விட FR 22 B மேலோங்கும் என்பது உறுதி படுத்தப்பட்டது .
FR 22 B (11) (1) 1.1.2006 க்கு முன்னர் கீழ்ப் பதவியின் தேர்வு நிலை அல்லது
சிறப்பு நிலைக்கு மாற்றப்பட்ட அரசு ஊழியர், 1.1.2006 க்குப் பிறகு பதவி உயர்வு
அல்லது உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், மேலும் 1.1.2006 க்குப்
பிறகு தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலைக்கு மாற்றப்பட்டு திருத்தப்பட்ட ஊதிய
விகிதத்தைத் தேர்வுசெய்த சந்தர்ப்பங்களில்,
1.1.2006 க்குப் பிறகு, கீழ்நிலைப் பதவியின் தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலை ஒரே
மாதிரியான அல்லது அதிக ஊதியக் குழு மற்றும் அல்லது தர ஊதியத்தைக் கொண்ட
சந்தர்ப்பங்களில், அரசு ஊழியர் 17.08.2009 தேதியிட்ட அரசு கடிதம் எண்.45113/நிதி
(பிசி) துறையில் வெளியிடப்பட்ட தெளிவுபடுத்தல்களின்படி, கீழ்நிலைப் பதவியின்
தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலைக்கு பொருந்தக்கூடிய அதே ஒத்த அல்லது அதிக ஊதியக்
குழு மற்றும் தர ஊதியத்தில் தொடர அனுமதிக்கப்படுவார். அரசு ஊழியர் பயன்படுத்தும்
விருப்பத்தின் அடிப்படையில், பதவி உயர்வு அல்லது நியமனம் செய்யப்பட்ட
தேதியிலிருந்து அல்லது கீழ்நிலைப் பதவியில் அடுத்த ஊதியக் குழு திரட்டப்பட்ட
தேதியிலிருந்து ஒரு ஊதியக் குழு சலுகையுடன்.
FR 22 B (11) (1) இன்று வரையிலும் நடைமுறையில் உள்ளது .
அரசு கடிதம் எண் 63305 நிதித்துறை நாள் 30.11.2010
ல் 4 (1) ன் படி ஊதிய நிர்ணயம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் .இது ஊதிய நிர்ணய
தெளிவாணை கடிதம் .ஆனால் FR 22 B (11) (1) ன் படி தர ஊதியம் 5400 வழங்கப்பட்டது
சரி .அரசின் தெளிவாணை கடிதத்தை விட FR 22 B மேலோங்கும்
நீதிமன்ற வழிகாட்டுதல்கள்
1.தேர்வு நிலை / சிறப்பு நிலையில் முறையே அப்பணியிடத்தின் முதல் மற்றும் இரண்டாம்
நிலை பதவி உயர்வு பணியிடங்களின் சாதாரண நிலை ஊதிய விகிதத்திற்கு
மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆணை ரத்து செய்யப்படுகிறது. தேர்வு நிலை /
சிறப்பு நிலைக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை recovery செய்ய கூடாது.
2.பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வு கால பயன்களில் இருந்து recovery
செய்ய கூடாது
3 .பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் recovery கூடாது
4.ஊதியத்தில் தொகை பிடிக்கப்பட்டு இருந்தால் திருப்பி தர வேண்டியதில்லை.FR 22 B
திருத்தம் செய்யப்பட்ட பிறகு ஏதேனும் தொகை வழங்க வேண்டி இருந்தால் வழங்கலாம்
5.FR 22 B திருத்தப்படும் வரை ஊதிய நிர்ணயத்தை அனைவருக்கும் திருத்த கூடாது .
6) G.O. Ms. No.63305/Pay Cell/2020-1 நாள் : 08.11.2020ஐப் பொறுத்து, FR 22-B
இல் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டால், பணியில் இருப்பவர்களின் தேர்வு
தரத்தில் அவர்களின் சம்பள அளவுகளை மறுசீரமைப்பதன் மூலம் பணியில் உள்ள நபர்களின்
சம்பளத்தையும், தேர்வு தரத்தில் அவர்களின் சம்பள அளவுகளை மறுசீரமைப்பதன் மூலம்
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய சலுகைகளையும் திருத்த சுதந்திரம் கொண்டுள்ளனர். G.O.
Ms. No.63305/Pay Cell/2010-1 நாள் 8.11.2010 இன் பத்தி 4 (i) இன் அடிப்படையில்
செலுத்த வேண்டிய ஏற்றுக்கொள்ளத்தக்க ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கு FR 22-B இல்
செய்யக்கூடிய திருத்தங்களுக்கு ஏற்ப, இது வருங்காலமாக மட்டுமே பொருந்தும்,
பின்னோக்கி அல்ல.
7.) FR 22 B திருத்தம் செய்யப்பட்ட பிறகு HM - MS பணியில் 10 ஆண்டுகள்
பணியாற்றியது அடிப்படையில் தேர்வு நிலை அனுமதிக்கப்படும்
8) FR 22 B ல் திருத்தம் செய்யப்பட்ட பிறகு HM - PS தேர்வு நிலை ஊதிய நிர்ணயம்
மாற்றப்பட்டு அதன் தொடர்ச்சியாக HM - MS தேர்வு நிலை ஊதிய நிர்ணயம் மாற்றப்படும்
போது , ஏதேனும் தொகை வழங்க வேண்டி இருந்தால் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட
வேண்டும்.
9) ஓய்வு பெற இருப்பவர்களுக்குஓய்வு பெற்ற தேதியில் கடைசியாக பெற்ற ஊதியத்தின்
அடிப்படையில் ஓய்வூதியம் AG அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு கடைசியாக
பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிட்டு நிலுவை தொகையுடன் வழங்க
வேண்டும்.
தீர்ப்பு பொது தீர்ப்பாகும் .FR 22 B திருத்தம் எல்லோருக்கும் செய்யப்படும் .
தீர்ப்பில் AG க்கும் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக பொதுவான வழிகாட்டுதல் தான்
வழங்கப்பட்டு உள்ளது . பிடிக்கப்பட்ட தொகையை திரும்ப உடனே வழங்க வேண்டியதில்லை
என்பது திரு குணசேகரன் உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்கு எதிரானது .திரு
குணசேகரன் தணிக்கையின் மூலம் கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடித்த பிறகு ,
ஓய்வூதியம் பெற்றார். ஓய்வு பெறும் தருவாயில் பிடித்த தொகை 726651 உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு பிறகு 27.01.2025 கல்வித்துறையால் வழங்கப்பட்டு உள்ளது.gratuity
உட்பட நிறுத்தி வைக்கப்பட்டு / கட்டிய பிறகு ஓய்வூதியம் பெற்றவர்கள் உறுதியாக
திரும்ப மேல் முறையீடு / சீராய்வில் உறுதியாக பெறலாம்.
சட்ட வழிகாட்டல் பெற தொடர்பு கொள்க
ஆ. மிகாவேல் ஆசிரியர் ,
மணப்பாறை
0 Comments