சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்காக குடிமைப் பணி
(சிவில் சர்வீஸ்) தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான
இத்தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது.
அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை
யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐஎஃப்எஸ்,
ஐபிஎஸ் உள்ளிட்ட 23 விதமான பதவிகளில் மொத்தம் 933 காலி இடங்கள் நிரப்பப்பட
உள்ளன.
இத்தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால்
போதும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21 முதல்32 வரை. ஓபிசி
வகுப்பினருக்கு 3 ஆண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும் வயது
வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுடைய பட்டதாரிகள்
https://upsconline.nic.in என்ற
இணையதளம் மூலமாக பிப்.24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments