TLM வைத்து தங்களது கோரிக்கையை விளக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்த
இடைநிலை ஆசிரியர்கள்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை
பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்.
அதில் இடைநிலை ஆசிரியர்கள் பிறருக்கு தங்களது நிலையை உணர்த்த காட்சிப்படுத்திய
பொருள்கள் அனைவரையும் கவனிக்க செய்துள்ளது
2009க்கு பின் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தற்போது அதற்கு முன்னர்
நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை கூறி தமிழ்நாடு முழுவதும்
போராட்டம் நடத்தி வருகின்றனர்
இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள் பெரும்பாலும் பிஞ்சு குழந்தைகள் முதல் ஐந்தாம்
வகுப்பு வரை வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் ஆவார்கள்
அவர்கள் தங்களது மாணவர்களுக்கு (குழந்தைகளுக்கு) பாடப் பொருளை புரிய வைக்க
பல்வேறு வகையான கல்வி சார்ந்த உபகரணங்களை பயன்படுத்துவர்.
அவ்வாறு நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய போராட்டத்தில்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இடைநிலை
ஆசிரியர்கள் பயன்படுத்திய துணைக்கருவிகள் தங்கள் மேல் மாற்றுக்கருத்து உடைய
ஆசிரியர்களையும் மற்றும் பொதுமக்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு
ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் செம வேலைக்கு செம ஊதியம் பெறுவதே எங்கள் லட்சியம்
என்ற தலைப்பில் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் திடீர் தர்ணா
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் கொடுத்த 311 வது வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை
வைத்து ஒரே ஒரு நாள் மாறுபட்டதின் காரணமாக எங்களுக்கு முன் ஒரு நாள் பணியில்
சேர்ந்தவர்களுக்கு 8370, எங்களுக்கு 3700 இந்த வித்தியாசத்தை தகர்த்து
எறிந்துவிட்டு சம வேலை சம ஊதியம் என்பதினை அறிவிக்க வேண்டி கேட்கிறோம் என்று நீதி
தேவதை போல கண்ணை கட்டி சம்பள அளவை நிறுத்தி காட்டினர்.
அதில் நீதி தேவதையின் தராசில் ஒரு பக்கம் 5200 என்றும் மற்றொரு பக்கத்தில் 80370
என்றோம் எப்படி இரு பக்கமும் சமமாக இருக்க முடியும் என்பதை தத்ரூபமாக பிறருக்கு
விளக்கிக் காட்டினர்
அவர்களுக்கு பாடப் பொருளை விளக்க பெரும்பாலும் துணைக் கருவிகளை
பயன்படுத்துவார்கள்
அவ்வாறு தங்களது கோரிக்கைகளுக்கு துணைக்கருவிகளாக நீதி தேவதையும் தராசையும்
பயன்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
பின்னர் சக ஆசிரியர்கள் நாங்கள் 16 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் எங்களை
தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை, கல்வி அமைச்சர் இவர்கள் நடந்து இருப்பது அநீதி தான்
என்று கூறியவர் அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எங்களை நம்பி கல்வி கற்க வரும் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகள் தான். அவர்கள் கல்வி
கெடாத வகையில் தான் நாங்கள் போராடி வருகிறோம். எனவே தமிழக அரசு இதன் மீது கவனம்
செலுத்தி நீங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற செய்ய
வேண்டும் என்று தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments