தமிழ்நாடு அரசின் உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டம் (TAPS) மோசமானது
என்று கூறும் அனைத்து தரப்பு பிரிவினருக்கும் ஒரு வேண்டுகோள்
தமிழ்நாடு அரசின் உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டம் மோசமானது அபாயகரமானது மக்களை
ஏமாற்றுவது என்று கூறும் அனைத்து தரப்பு பிரிவினருக்கும் ஒரு வேண்டுகோள்
கடந்த 2003 முதல் 2025 டிசம்பர் வரை ஏறக்குறைய 47 ஆயிரத்து 800 பேர் ஓய்வு பெற்று
உள்ளார்கள். இவர்கள் யாரும் பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லி
அரைவேக்கட்டுத்தனமாக ஒரு கோடி வரும் என அங்கலாய்க்கும் நபர்கள் கூறியதைப் போல
யாருக்கும் ஒரு கோடியோ அல்லது குறைந்தபட்சம் 50 லட்சமோ இறுதி பணம் (ஊழியர்
பங்களிப்பு +அரசு பங்களிப்பு இரண்டுக்கும் சேர்த்து கூடுதலாக 7% முதல் 11%
வரையிலான இடைப்பட்ட வட்டி விகிதங்களில் வட்டி அளிக்கப்பட்டும் மொத்தமாக) பெற்றதாக
தெரியவில்லை.
பெற்ற முழுத் தொகையையும் யாரும் அப்படியே வங்கியில் முதலீடு செய்ததாகவும்
தெரியவில்லை.
எனவே இனிவரும் காலங்களில் எனக்கு ஒரு கோடி வரும் என்பது மாயை.
அப்படியே ஒரு கோடி வந்தாலும் அதை அப்படியே வங்கியில் டெபாசிட் செய்வோம் என்பது
அதைவிட பெரிய கட்டுக்கதை.நடைமுறைக்கு இயலாத செயல். காரணம் ஓய்வு பெறும் பொழுது
வரும் தொகை அனைத்தையும் பழைய ஓய்வுதிய திட்டத்தில் இருப்பவர்களும் சரி ,
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருப்பவர்களும் சரி யாரும் வங்கியில் முதலீடு
செய்ததாக தெரியவில்லை.அதுவே உண்மை நிலையும் கூட ஆசிரியர்களுக்கு வேறு வருமானம்
இல்லை, வேறு வருமானம் இருக்கின்ற அரசு ஊழியர்கள் மற்றும் பிறர் வந்த தொகை
முழுவதும் வங்கியில் செலுத்தியதாகவும் வரலாறு இல்லை
ஒன்று ஓய்வு பெறுவதற்கு முன்னரே மகள் திருமணம் மகன் திருமணம் வீடு கட்டியமை நிலம்
வாங்கியமை அல்லது மகன் மகள் மருமகன் மருமகள் போன்றோர் வியாபாரம் செய்ய முதல்
போட்டமை உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டிருக்கின்ற கடனுக்கு வட்டியும் முதலுமாக
திருப்பி செலுத்துகின்றனர்.அல்லது பிரித்து கொடுத்திருக்கின்றனர்
ஏதோ ஒரு சிலர் பணத்தை சேர்த்து வைத்து முதுமையில் தன் மீது டெபாசிட்
வைத்துள்ளார்கள்
அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை தினசரி பேப்பர்களை பார்த்தால்
தெரியும்
தனியாக வசிக்கும் பணம் இருப்பவர்களை அவர்களின் உறவினர்களே இன்னும் சொல்லப்போனால்
மகன் மகள் மருமகள் போன்ற நெருங்கிய உறவினர்களே பணத்திற்காக அவர்களை இல்லாமல்
ஆக்குவது (நான் இங்கு கொலை செய்வார்கள் என்று கூற எனக்கு மனமில்லை) என்பது கண்
கூடு.
ஒரு கோடி வரும் என்பதை எவ்வாறு நாம் நியாயப்படுத்துகிறோமோ அதே போலத்தான் நாம் ஒரு
கோடி டெபாசிட் செய்து வைத்திருந்தால் நம் உறவுகள் நம்மை இல்லாமல் செய்து
விடுகிறார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.நியாய்யபடுத்த்
வேண்டும்
ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நிகழ்வு
ஒரு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக இரண்டு மகன்கள் சேர்ந்து ஐந்து லட்சம்
கொடுத்து ராஜ நாகத்தை கொண்டு வந்து தன் தந்தையையே கடிக்க வைத்து இன்சூரன்ஸ்
தொகையை பெறுவதற்காக அவரை இல்லாமல் செய்து
பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது
உண்மை வெளியே வந்து அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை நாம் நோக்க வேண்டும்
பணத்திற்காக தாய் ,தந்தை பாட்டியையும் தாத்தாவையும் மாமனாரையும் மருமகளையும் கொலை
செய்யும் வக்கிர புத்தி கொண்ட போதைக்கு அடிமையான சமூகம் தற்பொழுது வளர்ந்து
வருகிறது என்பதையும் நாம் கண்ணெதிரே காண்கிறோம்.
எனவே இந்த திட்டம் மோசடியானது ஏமாற்றமானது என்று கருத்து தெரிவிக்கின்ற எந்த ஒரு
அரசியல் கட்சியையும் தான் கூட்டணி வைத்திருக்கின்ற அல்லது தான் ஆதரிக்கின்ற கட்சி
ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இவர்களைப் போல சொல்லும் சிறப்பு வாய்ந்த பழைய
ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க
வேண்டும்.
அல்லது
தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற பென்ஷன் திட்டத்தை விட பல வழிகளில் குறைந்த
பணப்பலன்களை கொண்ட ஒன்றிய அரசின் யுபிஎஸ் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும்
பொழுது
இவர்கள் எல்லோரும் ஆகா ஓகோ என்று வரவேற்றவர்கள் தான் என்பதையும் கருத்தில் கொள்ள
வேண்டும்
அல்லது
இன்று வரை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள
வேண்டும்
இவர்களின் ஒரே நோக்கம் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமல்படுத்திருக்கின்ற இந்த
திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதுதான்
எனவே ஆசிரியர் அரசு ஊழியர் பெருமக்கள் இந்த திட்டத்தின் பெரும் பயனை எண்ணி
ஏற்றுக்கொள்ள வேண்டும்
அதே நேரத்தில் 23 ஆண்டு காலம் இதனை எதிர்த்து பெறுவதற்கு போராடியதைப் போன்று
மீதமுள்ள 10% தொகையையும் பெறுவதற்கு உண்டான போராட்டத்தை
இன்றைய சங்கங்கள் ஆரம்பிக்கும் பொழுது வலுவோடு கரம் கோர்க்க வேண்டும்
மேலும்
பாதிக்கப்படுகின்ற தற்போது பணியில் இருக்கின்ற ஆறரை லட்சம் பேர் ஒன்று சேர்ந்து
எதிர்க்க வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட ஜாக்டோ ஜியோ போராட்டங்கள்
பலவற்றில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பயணிப்போர் கலந்து கொண்டவர்களின்
சதவீதம் மிகக் குறைவே என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்
எனவே நடைமுறையில் ஒரு சில குறைபாடுகளைக் கொண்டுள்ள இந்த திட்டத்தை மீண்டும்
திருத்தம் செய்ய வேண்டி நாம் கோரிக்கை வைப்போம் .
அதற்காக போராடவும் செய்வோம்
கூட்டு வலிமை கொண்ட போராட்டத்திற்கு முன்பாக எந்த சக்தியும் அசையாமல் இருக்க
முடியாது என்பதைத்தான் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பென்ஷன் திட்டம்
பறைசாற்றுகிறது
எப்பொழுதும் ஊழியர்களின் போராட்டங்கள் பொய்த்துப் போவதில்லை
சில நேரங்களில் வெற்றி தள்ளிப் போகும்
கிடைத்தது குறையுடன் இருந்தாலும் கையில் கிடைக்கப்பெற்ற பின் குறையை சரி செய்ய
முயல்வோம்
கையில் ஏதுமே இல்லாததற்கு இது சிறந்தது என்று ஏற்றுக் கொள்வோம்
வாழ்க்கையின் எதார்த்தத்தில் சிலவற்றை பரிசீலிக்க வேண்டும்
எல்லாம் கற்பனைக்கு நன்றாகத் தான் இருக்க வேண்டும்
நமக்கு கூட பல லட்சங்களில் ஊதியம் பெற வேண்டும் என்று ஆசைதான்
ஆனால் தற்போது இருக்கின்ற வேலை தேடுவோர் அனைவரின் மனநிலையை நினைத்து பாருங்கள்
ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பூதிய பணிக்கு MA, MSC, Be, ME, முதுகலை பட்டம்
முடித்தவர்கள் விண்ணப்பிக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்க வேண்டும்
ஒரு பக்கத்தில் குறைந்தபட்ச ஊதியம் 70 ஆயிரம் பெறக்கூடிய முதுகலை ஆசிரியர்
பணிக்கு 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்ற பல பேர் முன் வருகிறார்கள்
என்பதையும்
அரசுஅலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு இன்ஜினியரிங் மற்றும் முதுகலை முடித்த
பல பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்ற எதார்த்த நிலையும் பார்க்க வேண்டும்
வேலை வாய்ப்பின்மையும் சிறிய தொகைக்குக் கூட பல மைல்கள் பயணமாற்றி உணவு சப்ளை
செய்யும் மிக சாதாரணமான வேலையை கூட பல பட்டதாரிகள் பொறியாளர்கள் தற்பொழுது செய்து
கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்
சில ஆயிரங்களுக்கு தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பலர் தன் வாழ்க்கையை தொலைத்து
வருகிறார்கள்
எடுத்தவுடன் லட்சங்களில் ஊதியம் பெறவேண்டிய கல்லூரி ஆசிரியர்கள் கெஸ்ட் லெக்சரர்
என்ற பெயரில். மருத்துவர்கள் தொகுப்பூதியத்தில் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம்
ஊதியத்திற்கே பணியாற்றி வருகின்றனர்
அதற்கு விண்ணப்பிக்கவும் பலரிடையே போட்டி.
இன்றைய கடினமான சூழ்நிலையில் அரசு வேலை பெறுவது குதிரைக்கொம்பு. வேலைக்கேற்ற
தகுதி இல்லாது ஆகச்சிறந்தகல்வித்தகுதியைக்கொண்டு குறைந்தபட்ச கல்வித்தகுதிக்க்கன
பணியே பலருக்கு கிடைத்துள்ளது, பொறியாளர் பட்டம் பெற்ற பலர் ஜூனியர் அசிஸ்டண்டாக
குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்று பணியேற்க வேண்டிய நிலை
22 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் கிடைத்திருப்பது குறைபாடுகள் உடைய ஓய்வூதிய
திட்டம் தான் என்பதை மறுப்பதற்கு இல்லை
அதே நேரத்தில் அதனையும் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு புறந்தள்ளி செல்வது
புத்திசாலித்தனம் இல்லை
என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து
போராட்டம் என்றும் முடிவதில்லை அது அரசுடன் மட்டுமில்லை வாழ்க்கையிலும் கூடத்தான்
நன்றி
அன்புடன்
கே.பி.ரக்ஷித்

0 Comments