அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. பொருத்துக : (அ) மருப்பு -- வீரம் (ஆ) மறம் -- ஆண்யானை (இ) மாறன் -- தந்தம் (ஈ) களிறு -- பாண்டிய மன்னன் குறியீடுகள்
2. சித்தன்னவாசல் ஓவியம் பற்றிய கூற்றில் சரியானதைத் தேர்க. (1) சித்தன்ன வாசல் ஓவியத்தை வரைவித்தவர் மதுரை “ஆசிரியர் இளம்கௌதமன்”. (2) இளம் கௌதமன் அவனிசேர ஸ்ரீவல்லபன் காலத்தில் சித்தன்ன வாசல் குகையைப் புதுப்பித்தார். (3) அண்மை காலம் வரை சித்தன்ன வாசல் - பல்லவர் கால ஓவியம் எனப்பட்டது.
3. ஓவியம் வரைய சங்ககாலத்தில் பயன்படுத்திய பொருள்
4. பின்வரும் கூற்றுகளில் தவறானது எது எவை? 1. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி வேலுநாச்சியார் 2. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் அஞ்சலையம்மாள் 3. தென்னாட்டின் ஜான்சிராணி அம்புஜத்தம்மாள் 4. ‘நான் கண்ட பாரதம்’ - அம்புஜத்தம்மாள்
5. “அகத்தே கறுத்து புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” என்று கூறிய சான்றோர் தேர்க:
6. செலவிடா தீதொரீஇ - இதில் இடம்பெறும் அளபெடை
7. வளர்க்குறூ உம் - அளபெடை
8. இலக்கணக் குறிப்பு தருக : ‘உயர்துலை’
9. ‘வாங்குவில்’ - இலக்கணக் குறிப்பு தருக:
10. நிகழ்கால இடைநிலைச் சொல்..... தேர்க
11. சென்னையில் முக்கியமான ஐந்து இடங்களில் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் எனத்தலித்துகளுக்கு இலவசப்பள்ளிகளை நிறுவியவர்.
12. அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு முதலியன ........ எனப்படும்
13. ‘கந்தர் கலி வெண்பா’ பாடியவர் யார்?
14. கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள அறநூல்கள்
15. “ஆயிரத்தெண்ணூறு மொழிகளுக்கு வேர்ச் சொற்களையும், நூற்றெண்பது மொழிகளுக்குஉறவுப் பெயர்களையும் தந்துள்ளது தமிழ்” - என்று கூறியவர்.
16. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
17. பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
18. பொருத்துக : நிலம் ஊர் 1. நெய்தல் - ணீ. பேரூர், மூதூர் 2. குறிஞ்சி - தீ. பாடி, சேரி 3. மருதம் - நீ. பட்டினம், பாக்கம் 4. முல்லை - பீ. சிறுகுடி குறியீடுகள்
19. திரைக்கவித்திலகம் அ.மருதகாசி பிறந்த ஊர் எது?
20. ஒரூஉ மோனை ---- சீர் எண்ணிக்கை (எண்)
21. “வைகறை எழுக” - வைகறை என்பது எவ்வகை ஆகுபெயர் தேர்க
22. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - மோனை நயம் தேர்க:
23. பொருத்துக. (1) கடுவன்(வானரங்கள்) -1 பெண் குரங்கு (2) மந்தி -2. ஆண் குரங்கு (3) கூனல் 3. சடை (4) வேணி 4. வளைந்த
24. ‘வௌ’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
25. மகர குறுக்கம் பயின்று வராத சொல்
26. ஓடக் காண்பது பூம்புனன் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம் - பாடல் இடம் பெற்ற நூல்.
27. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ - இக்குறட்பாவில் உள்ள வேர்ச்சொல்லைக் கண்டறிக
28. தவறானதைத் தேர்வு செய்க 1. வேற்றுமை 6 வகைப்படும் 2. தளை 7 வகைப்படும் 3. எட்டாம் வேற்றுமையின் மற்றொரு பெயர் விளிவேற்றுமை என்பர் 4. செயப்படுபொருள் வேற்றுமை என அழைக்கப்படுவது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகும்.
29. “ஒரு கிலோ பருப்பு வாங்கி வந்தேன்” - எவ்வகை அளவை தேர்க
30. கூற்றுகளை கவனி: கூற்று (A): (எ.கா) படித்தான், நடந்தான், வளர்ந்தான். காரணம் (R): பிரிக்க இயலும் பதம் பகுப்பதம் எனப்படும் அவ்வாறு பிரிக்கும்போது அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு வகைப்படுகின்றன.
31. “அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்” - எவ்வகை ஆகுபெயர் பெயர் தேர்க
0 Comments