1. பொருத்துக 1. வெட்சி – a. நிரை மீட்டல் 2. கரந்தை – b. போர் மேற் செல்லல் 3. வஞ்சி – c. எதிர்த்துப் போரிடல் 4. காஞ்சி – d. நிரை கவர்தல்
2. “வேலவா? வா” – எவ்வகை தொடர் தேர்க:
3. “ரூபாயத்” என்றால்?
4. பூம்புகார் நகர மாட மாளிகையில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன எனக் கூறும் நூல்?
5. பாரதிதாசன் எழுதாத நூலைக் கண்டறிக 1. தமிழியக்கம் 2. தமிழ்த்தேர் 3. சேரதாண்டவம் 4. படித்த பெண்கள்
6. “சமூக மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்று கூறியவர்
7. இலக்கணக் குறிப்பு. கருமுகிலும் வெண்மதியும்
8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (அ) மல்லல்நெடுமதில் – உரிச்சொற்றொடர் (ஆ) உயர்துலை – வினைத்தொகை (இ) மாறன்களிறு – இரண்டாம் வேற்றுமைத் தொகை (ஈ) மருப்பூசி – உருவகம்
9. “கோவை” - பெயர் சொல்லின் வகை அறிக.
10. இலக்கண குறிப்பு தருக : ‘குறையா வன்கண்’
11. “மல்லிகை சூடினாள்” - இதில் மல்லிகை என்பது எவ்வகை ஆகுப்பெயர் தேர்க
12. கூற்றுகளை ஆய்க. 1. சாதி என்னும் பாறை உடைந்து சுக்கு நூறாக இடைவிடாது உழைத்தவர்கள் பெரியார் - அம்பேத்கர் 2. “எங்கே சமத்துவம் மறுக்கின்றதோ அங்கே மனிதப் பண்பு மறைந்து விடுகிறது - பெரியார். 3. சாதி களையப்பட வேண்டியவை - அம்பேத்கர்
13. கம்பர் எழுதாத நூலைத் தேர்க
14. ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்’ - என்னும் வரி உணர்த்துவது
15. வள்ளலாரை புதுநெறி கண்ட புலவர் என போற்றியவர் யார்?
16. “மாடு பிடித்தான்” - எவ்வகை வேற்றுமை உருபு தேர்க:
17. சார்பெழுத்துக்கள் ... மொத்த கூடுதல் எண்ணிக்கை
18. கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் அடியில் அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக : சிற்றில்நற்றூண் பற்றி நின் மகன்
19. இலக்கணக் குறிப்பறிதல் “நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே” கூற்று (A) : செய்யுளிசையளபெடை காரணம் (R) : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்
20. “நல்வழி” இலக்கணக்குறிப்பு கண்டறிக :
21. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I பட்டியல் II (அ) ஏலாதி 1. மதுரைக் கூடலூர்க்கிழார் (ஆ) முதுமொழிக் காஞ்சி 2. கணிமேதாவியார் (இ) சிறுபஞ்ச மூலம் 3. பெருவாயில் முள்ளியார் (ஈ) ஆசாரக்கோவை 4. காரியாசான்
22. “ஒப்பிலக்கணத் தந்தை”என அழைக்கப்படுபவர்
23. “உயிரில் கலந்தான் கருணை கலந்து”- இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
24. ‘தை’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
25. ‘வள்ளைக்கு உறங்கும் வளநாட’ - வள்ளை என்பதன் பொருள் யாது?
26. அசலாம்பிகை அம்மையார் குறித்த கூற்றுகளில் தவறானது எவை? 1. அசலாம்பிகை அம்மையாரை இக்கால ஔவையார் என்று திரு.வி.க பாராட்டியுள்ளார் 2. நானூற்று ஒன்பது பாடல்களைக் கொண்ட இராமலிங்க சாமிகள் சரிதம் எனும் செய்யுள் நூலை இயற்றியவர் 3. காந்திபுராணம் ஈராயிரத்து முந்நூற்று நான்கு பாடல்களைக் கொண்டது. 4. திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணையில் பிறந்தவர்
27. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் மூன்றாம் வேற்றுமைத் தொகையோடு பொருந்துவது எது? 1. பால் பருகினான் 2. தலை வணங்கினான் 3. ஊர் நீங்கினான் 4. கை தொழுதான்
28. அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கால்டுவெல் - பிறந்த - மறைந்த ஆண்டைத் தேர்வு செய்க:
29. எட்டுத்தொகை நூல்களில் கீழ்கண்ட இலக்கியங்களுக்கு அடிவரையறைத் தேர்க: 1. அகநானூறு – a. 4 அடி முதல் 8 அடி வரை 2. நற்றிணை – b. 3 அடி முதல் 6 அடி வரை 3. குறுந்தொகை – c. 13 அடி முதல் 31 அடி வரை 4. ஐங்குறுநூறு – d. 9 அடி முதல் 12 அடி வரை
30. கணித மேதை இராமனுஜம் பிறந்த ஆண்டு - மாதம் - நாள் - தேர்க:
0 Comments