TNTET 2025 - தேர்வு முடிவு​கள் விரை​வில் வெளி​யீடு?

      TNTET 2025 - தேர்வு முடிவு​கள் விரை​வில் வெளி​யீடு?

தமிழகத்​தில் 4.24 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் எழு​தி​யுள்ள 'டெட்' தேர்​வுக்​கான ‘கீ ஆன்​ஸர்’ டிஆர்பி இணை​யதளத்தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதைத்​தொடர்ந்​து, தேர்வு முடிவு​கள் விரை​வில் வெளி​யிடப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மத்​திய அரசின் இலவச கட்​டாய கல்வி உரிமைச் சட்​டத்​தி்ன்​படி பள்​ளி​களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களும் பட்​ட​தாரி ஆசிரியர்​களும் டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித்​தேர்​வில் கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். இதைத்தொடர்நது டெட் தேர்வு கடந்த நவ.15 மற்​றும் 16-ம் தேதி நடந்தது.

இந்​நிலை​யில் இந்தத் தேர்​வுக்கான உத்​தேச விடைகளை (கீ ஆன்ஸர்) ஆசிரியர் தேர்வு வாரி​யம் இணை​யதளத்​தில் வெளி​யிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வாரி​ய தலை​வர் ஜெயந்தி வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு:

டெட் தேர்​வு​களுக்​கான உத்​தேச விடைக்​குறிப்​பு​கள் வினாக்​களு​டன் https://trb1.ucanapply.com என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இவை மீது ஆட்​சேபணை​கள் தெரிவிக்க விரும்​புவோர் டிச.3 மாலை 5.30 மணிக்​குள் ஆன்​லைனில் பதிவுசெய்ய வேண்​டும். அங்​கீகரிக்​கப்​பட்ட பாடப்​புத்​தகங்​கள் (standard Text Books) ஆதா​ரங்​கள் மட்​டுமே சான்று ஆவண​மாக ஏற்​றுக்​கொள்​ளப்​படும். கைடு​கள் ஏற்​கப்​ப​டாது. மேலும், பாட​வல்​லுநர்​கள் முடிவே இறு​தி​யானது. இவ்​வாறு கூறி​யுள்ளார்.

டெட் தேர்​வுக்​கான உத்​தேச விடைகள் வெளி​யிடப்​பட்​டிருப்​ப​தால் விரை​வில் தேர்வு முடிவு​களும் வெளி​யிடப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கிடையே, டெட் தேர்​வுக்​கான தேர்ச்சி மதிப்​பெண் ஒடிசா உள்​ளிட்ட இதர மாநிலங்​களில் இருப்​ப​தைப் போல் 50 சதவீத​மாக குறைக்க வேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது.

இதுதொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்​கங்களும் அமைச்சர் அன்​பில் மகேஸிடம் வலி​யுறுத்​தியுள்ளன. இதை ஏற்று தேர்ச்சி மதிப்​பெண் குறைக்​கும்பட்​சத்​தில் முதலில் அது தொடர்​பான அரசாணை வெளி​யிடப்​படும். அதைத்​தொடர்ந்து தேர்வு முடிவு​கள் வெளி​யாகும்.

ஆந்​தி​ரா, தெலங்​கானா மாநிலங்​களில் டெட் தேர்ச்சி மதிப்​பெண் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்கு 50 சதவீத​மாக​வும், எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 40 சதவீத​மாக​வும் உள்​ளது. ஹரி​யா​னா​விலும் ஒடி​சாவிலும் அனைத்து பிரி​வினருக்​கும் 50 சதவீதமாக உள்ளது.

தமிழகத்​தில் பொது பிரிவுக்கு 60, பிசி, எம்​பிசி, எஸ்சி வகுப்பினருக்கு 55, எஸ்டி (இந்த ஆண்டு மட்​டும்) 40 சதவீதம் என நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

Post a Comment

2 Comments

  1. Please reduce the cut off mark for all categories which will be very helpful to single parent like me who needs the job very badly.. plz consider my humble request , this is to our educational minister sir..

    ReplyDelete
  2. Please reduce the cut off mark for all categories which will be very helpful to single parent like me who needs the job very badly.. plz consider my humble request , this is to our educational minister sir..

    ReplyDelete