TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 57

தமிழ் வினாடி வினா - Test 57

தமிழ் வினாடி வினா - தேர்வு 57

 

1. சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.
2. மாட்டை தழுவும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.
3. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
4. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்।

2. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக.
ஊட்டமிகு உணவு உண்டார் - அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. பொருந்தாத சொல்லைக் கண்டறிக: கர்நாடகம், கேரளா, இலங்கை, ஆந்திரா

4. எதிர்ச்சொற்களைப் பொருத்துக:
1. எளிது     புரவலர்
2. ஈதல்     அரிது
3. அந்நியர்     ஏற்றல்
4. இரவலர்     உறவினர்

  (a) (b) (c) (d)

5. “புதுமணல்” என்பதன் எதிர்ச்சொல் எழுதுக

6. எதிர்சொல்லை எடுத்தெழுதுதல் : இயற்கை

7. பிரித்து எழுதுக: “துயின்றிருந்தார்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது।

8. விடை வகைகள் : ‘நீ சாப்பிட வில்லையா?’ என்ற வினாவிற்கு “சாப்பிட்டால் தூக்கம் வரும்” என்று உரைப்பது।

9. அலுவல் சார்ந்த கலைச் சொற்களை கண்டறிந்து எழுதுக : ஃபோல்டர் (Folder)

10. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
தோசை வைக்கப்பட்டது।

 

பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும் (11-15)

காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார் உடனே அவர்களை உள்ளே அழைத்தார். யாரைப் பார்க்க வந்தீங்க? என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால், என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்திட்டு வருவாங்க அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்றனர். அதனைக் கேட்டு காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

11. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் யார்?

12. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?

13. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் எப்படியிருந்தது?

14. சிறுவனும் சிறுமியும் எதற்காக காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?

15. மறுநாள் குழந்தைகள் எதைக் கொண்டு வந்தனர்?

16. ஒருமை பன்மை பிழையற்றதைக் கண்டறிக

17. கீழ்க்காணும் தொடர்களில் தன்மை ஒருமை தொடரைத் தேர்க

18. ஒருமை, பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக

19. தவறான பொருத்தம் எது?

20. சரியான பொருத்தம் :
சொல்   பொருள்

21. சொல்லை ஏற்புடைய பொருளுடன் பொருத்துக :
a) மயலுறுத்து - சீராக
b) அருகுற - அருகில்
c) லயத்துடன் - தீராத
d) மாளாத - மயங்கச்செய்

சரியான பொருத்த வரிசையைத் தேர்ந்தெடுக்க:

22. பிழையற்ற தொடரை அறிக :

23. மரபுச் சொற்களைப் பொருத்துக:
(a) கிளி   1. கூவும்
(b) மயில்   2. பேசும்
(c) ஆந்தை 3. அகவும்
(d) சேவல்   4. அலறும்

  (a) (b) (c) (d)

24. பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?

25. ‘தூது இலக்கியம்’ வேறு எந்த பெயரால் அழைக்கப்படுகிறது?

26. ஊர்ப்பெயரின் மருஉவை எழுதுக: திருச்சிராப்பள்ளி

27. ஊர்ப்பெயர்களின் சரியான மரூஉவை தெரிவு செய்க.
நாகப்பட்டினம்

28. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
தேவகோட்டை

29. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.
ஜங்கிள் (Jungle)

30. பிற மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
டி.வி. (T.V.)

 




Post a Comment

0 Comments