தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடவுச் சீட்டு (Passport) பெற
தடையின்மை சான்றுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பம் – புதிய நடைமுறை (G.O.
Ms.No.19 dt.28.05.2025)
தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்திருக்கும் புதிய நடைமுறைப்படி, அரசு ஊழியர்கள்
பாஸ்போர்ட் பெற IFHRMS மூலமாகவே NOC (No Objection Certificate) பெற்று பின்னர்
தான் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை - New procedure for NOC to obtain Passport to TN Govt
Employees
https://www.karuvoolam.tn.gov.in என்ற IFHRMS இணையதளத்திற்குச் செல்லவும்.
உங்கள் Employee ID, Password மூலம் Login செய்யவும்.
“Employee Services” பகுதியைத் திறந்து,
“Apply for Passport NOC” என்பதை தேர்வு செய்யவும்.
தேவையான தகவல்களை (உங்கள் பெயர், முகவரி மற்றவைகளை) நிரப்பி Submit செய்யவும்.
உங்கள் விண்ணப்பம் முதலில் DDO (Drawing Officer) பரிசீலனைக்கு போகும்.
அங்கிருந்து HoD (Department Head) அனுமதி பெறும்.
ஒப்புதல் கிடைத்ததும், Digital NOC PDF உங்கள் IFHRMS கணக்கில் உருவாகும்.
அந்த NOC ஐ Passport Seva Portal-ல் upload செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்.
NOC இல்லாமல் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியாது.
இந்த நடைமுறை 28.05.2025 முதல் கட்டாயமாகும்.

0 Comments