பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO
ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் 23.06.2025 & 24.06.2025 ஆகிய
நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது!
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் வரும்
23.06.2025 & 24.06.2025 ஆகிய இரண்டு நாட்களும் பேராசிரியர் அன்பழகன் கல்வி
வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் நடத்திடத்
திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றும்
அலுவலர்கள் ( முதன்மைக்கல்வி அலுவலர் , மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) . (
தொடக்கக் கல்வி ) , ( தனியார் பள்ளிகள் ) மற்றும் உதவித் திட்ட அலுவலர் ஆகியோர்
கலந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு மாவட்ட நிலவரம் ஆய்வுசெய்யப்பட உள்ளது .
இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளும்போது அந்தந்த மாவட்டத்திற்குரிய
கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்து இயக்குநர்கள் , இணைஇயக்குநர்கள்
கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநரும் ,
தொடக்கக்கல்வி இயக்குநரும் , தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
District Review Meeting - Click here to Download
0 Comments