முழு ஆண்டு தேர்வுகள் நிறைவு - பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

   முழு ஆண்டு தேர்வுகள் நிறைவு: பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை
முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புமாணவர்களுக்கான முழு ஆண்டுமற்றும் 3-ம் பருவத் தேர்வுகளை ஏப். 12-ம் தேதிக்குள் நடத்தி13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும்’ என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.

இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் நடக்க இருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன.

எனினும், 1 முதல் 3-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல்கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநேரம், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்கள் ஏப்ரல் 12-ம் தேதிவரை பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், தேர்தல் பணிகாரணமாக ஏப்ரல் 15 முதல்21-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தேர்தல் முடிந்ததும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி தேர்வுகள் கடந்த 22, 23-ம் தேதிகளில் நடத்தி முடிக்கப்பட்டன.

தேர்வுகள் நேற்றுடன் முடிந்தநிலையில், மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறைதொடங்குகிறது. எனினும், ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்ரல் 26 வரை பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றுபின்னர் அறிவிக்கப்படும். ஏனென்றால், மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments