ஆசிரியர் வாழைப்பழ வியாபாரியா!! 15 வருட ஆசிரியர் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கரோனா...

ஆசிரியர் வாழைப்பழ வியாபாரியா!! 15 வருட ஆசிரியர் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கரோனா...

     15 வருடங்களாக ஆசிரியர்; தற்போது வாழைப்பழ வியாபாரி - ஆசிரியரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கரோனா! 15 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவரை வாழைப்பழ வியாபாரியாக மாற்றியுள்ளது கரோனா.

    ஆந்திராவின் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட சுப்பையா. இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சில நாட்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்துக்கொண்டிருந்துள்ளார். ஆனால், அப்போது அவருக்கு 50% ஊதியத்தை மட்டுமே பள்ளி நிர்வாகம் கொடுத்துள்ளது.



 அதுமட்டுமல்லாமல், அடுத்த கல்வியாண்டுக்காக மாணவர் சேர்க்கையின்போது சில மாணவர்களை பள்ளியில் சேர்த்துவிடவேண்டும் எனவும் அப்படி செய்யவில்லை என்றால் பணியில் இருந்து நீக்கிவிடுவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.கரோனா அச்சம் காரணமாக சுப்பையாவால் பள்ளியில் மாணவர்களை சேர்க்க முடியவில்லை.

    அதனை அடுத்து கடந்த மே மாதம் அவரை பணி நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம். 2 குழந்தைகள், மனைவி என குடும்பத்திலேயே இவர் மட்டுமே உழைப்பவராக இருந்துள்ளார் சுப்பையா. ஆனால், திடீரென தன் ஆசிரியர் பணி பறிபோனதால் வேறு வழி தெரியாமல், குடும்ப செலவுகளை பார்ப்பதற்காக மே 20ம் தேதி முதல் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்க ஆரம்பித்துள்ளார்.ஆசிரியர் பணியில் இருந்தபோது மாதம் 16 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக்கொண்டிருந்தேன். ஆனால், தற்போது ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிப்பதே மிகவும் சிரமமாக இருக்கிறது. குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். ஊரடங்கு காலம் முடிந்தவுடன் வெறு ஏதாவது ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர முயற்சி செய்வேன். வாழைப்பழம் விற்பது தற்போதைய தேவைகளுக்காகத்தான்" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் சுப்பையா.



     தங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியரின் இந்த நிலையை பார்த்த அவரது முன்னாள் மாணவர்கள் சிலர் சுமார் 86 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி புரிந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பேசுபொருளாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments