அண்ணா பல்கலையில் 20 ஆண்டு அரியர் 23 முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலையில் 20 ஆண்டு அரியர் 23 முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

    20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள், சலுகை அடிப்படையில் தேர்வு எழுத, வரும், 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு படித்தவர்கள், தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு, தங்களின் படிப்பு காலம் தவிர, கூடுதலாக மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுத, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. இந்த விதிப்படி, அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் படித்த மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு காரணங்களால், யு.ஜி.சி., நிர்ணயித்த, அவகாசத்துக்கும் மேலாக அரியர் வைத்துள்ளவர்கள், தேர்வு எழுத சலுகைகள் கோரினர். இதுகுறித்து, உயர் கல்வித்துறை உத்தரவுப்படி, அண்ணா பல்கலை ஆலோசனை நடத்தியது. முடிவில், 2001 - 02ம் கல்வி ஆண்டில், மூன்றாவது பருவ தேர்வை எழுதிய மாணவர்கள் முதல், தற்போதுள்ள மாணவர்கள் வரை, அரியர் வைத்துள்ள அனைவரும், தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிப்பது என, அண்ணா பல்கலையின் சின்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, மார்ச், 12ல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த தேர்வை எழுத விரும்புவோர் வரும், 23ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. விபரங்களை, அண்ணா பல்கலையின்,  
   அரியர் தேர்வுக்கான விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் வழியாக அனுப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக, தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொத்தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், ஆசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேர்வு பணிகள், விடைத்தாள் திருத்தப்பணிகள் போன்றவை வழங்கப்படுகிறது இதனிடையே இன்ஜினியரிங் படிப்புகளில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், தேர்ச்சி பெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பை வழங்கியிருந்தது. அதன்படி, நடைபெற உள்ள 2020 பருவத்தேர்வுகளில் அரியர் மாணவர்கள், தங்களுடைய பாட தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம்.

  இதற்கான விண்ணப்பப்படிவம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான, www.annauniv.edu.in என்ற பக்கத்தில் கிடைக்கிறது. அதனை பெற்று, பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இன்ஜினியரிங் அரியர் தேர்வுக்கான விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் வழியாக அனுப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, மாணவர்கள் ஆன்லைனில் அரியர் விண்ணப்பப்படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, தங்களுடைய தேர்வு மையங்களுக்கு தபால் வழியாக அனுப்பப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 அண்ணா பல்கலையின், செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை மற்றும் அதன் சென்னை வளாகத்தில் உள்ள கல்லுாரிகளுக்கு, பல்கலையின் கூடுதல் தேர்வு துறை இயக்குனரகம் சார்பாக, செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மற்ற இணைப்பு கல்லுாரிகளுக்கும், உறுப்பு கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலையின், தேர்வு துறை இயக்குனரகம் சார்பில், செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளுக்கு, அந்தந்த கல்லுாரிகளே, தேர்வை நடத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும், முதலாம் பருவ தேர்வு, நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவ தேர்வு, ஏப்ரல், மே மாதங்களிலும் நடத்தப்படுகின்றன.

  இந்நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான, இரண்டாம் பருவ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், அனைத்து பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான, இரண்டாம் பருவ தேர்வு, ஏப்., 18ல் துவங்கி, மே, 21 வரை நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. பாடத்திட்டம் மற்றும் மண்டல கல்லுாரிகளுக்கான தேர்வு விபரங்கள், அண்ணா பல்கலையின், www.annauniv.edu என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments