கல்வி நிறுவனங்களின் கட்டட வரன்முறை அம்போ?

கல்வி நிறுவனங்களின் கட்டட வரன்முறை அம்போ?




    கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறை திட்டம் கைவிடப்பட்டதால், விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவன கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கட்டடங்கள் மீது, 'சீல்' வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க, அரசு முடிவு செய்தது. இதில், கடைசி வாய்ப்பாக வரன்முறை திட்டம், 2018 ஜூன், 14ல் அறிவிக்கப்பட்டது; இதை எதிர்த்து, சில அமைப்புகள் நீதிமன்றம் சென்றன.குறிப்பாக, ஏற்கனவே ஊராட்சி அனுமதி வைத்துள்ளோர், வரன்முறைக்கு வர மறுத்தனர். இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவால், வரன்முறை திட்டம் பாதியில் முடங்கியது.



     இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:நிலுவை வழக்குகளை விரைந்து முடித்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால், டி.டி.சி.பி.,யும், தமிழக அரசும், இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டாமல் உள்ளன.இதனால், தகுதியுள்ள பல கட்டடங்கள், வரன்முறை செய்ய முடியாத நிலையில் உள்ளன. இதை, ஒரு காரணமாக வைத்து, அப்பட்டமாக விதிமீறலில் ஈடுபட்டுள்ள கட்டடங்கள் மீது, நடவடிக்கை எடுப்பதையும் அதிகாரிகள் நிறுத்தி விட்டனர்.இந்த விவகாரத்தில், வீட்டு வசதித் துறை உயரதிகாரிகள் தலையிட்டு, தீர்வு காண வேண்டும். அப்போது தான், விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.








Post a Comment

0 Comments