இந்திய அரசியலமைப்பின்‌ பகுதிகள்‌ பற்றி ஆட்சியர் கல்வி IAS TNPSC தேர்வுக்காக வெளியிட்டுள்ள குறிப்பு




இந்திய அரசியலமைப்பின்‌ பகுதிகள்‌

பகுதி 1 (உட்பிரிவு 1-4)

-      இந்திய ஒன்றியம்‌ பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11)
-      இந்திய குடியுரிமை பற்றியது.






பகுதி 3 (உட்பிரிவு 12-35)
-      அடிப்படை உரிமைகள்‌/ அது மறுக்கப்படும்‌ போது அதற்கான தீர்வுகள்‌.

பகுதி 4 (உட்பிரிவு 36-51)
-      அரசு கொள்கைக்கான வழி காட்டும்‌ நெறிகள்‌.

பகுதி 4 ( உட்பிரிவு 51 )
-      அடிப்படை கடமைகள்‌.(1976 ஆம்‌ ஆண்டு 42வது திருத்தத்தின்‌ மூலம்‌ சேர்க்கப்பட்டது)






பகுதி 5 (உட்பிரிவு 52- 151)
-      ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர்‌,துணைக்‌ குடியரசு தலைவர்‌,நடுவண்‌ அமைச்சரவை, பாராளுமன்றம்‌ மற்றும்‌ அதன்‌ அமைப்பு, உச்ச நீதிமன்றம்‌ மற்றும்‌ அதன்‌ அமைப்பு.

பகுதி 6 ( உட்பிரிவு 152-237)
-      மாநில அரசமைப்பு, ஆளுநர்‌, மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம்‌ / சட்ட மேலவை அதன்‌ அமைப்பு உயர்‌ நீதி மன்றம்‌ அதன்‌ அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238)
-      அரசமைப்பு சட்டம்‌ முதல்‌ பட்டியலில்‌ உள்ள மாநிலங்கள்‌ பற்றியது- இந்தப்‌ பிரிவு இப்போது நீக்கப்‌ பட்டுள்ளது.






பகுதி 8 (உட்பிரிவு 239 -242)
-      ஒன்றியப்‌ பகுதிகள்‌ குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243)
-      உள்ளாட்சி-நிர்வாகம்‌ இந்த உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 9 ( உட்பிரிவு 2431-2432,2432&-24326)
-      நகராட்சி நிர்வாகம்‌ இந்த உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ளன.






பகுதி 10 (உட்பிரிவு 244)
-      பட்டியல்‌ சாதிகள்‌/ பழங்குடியினர்‌/ ஆங்கிலோ இந்தியர்‌ ஆகியோர்‌ குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263)
-      ஒன்றிய மற்றும்‌ மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300)
-      அரசின்‌ நிதி குறித்த உட்பிரிவுகள்‌ நிதி / நிதியினைக்‌ கையாளும்‌ நெறிகள்‌.






பகுதி 13 ( உட்பிரிவு 301- 307)
-      இந்திய நாட்டில்‌ வணிகம்‌ செய்யும்‌ நடைமுறைக்கான உட்பிரிவுகள்‌.

பகுதி 14 ( உட்பிரிவு 308-323)
-      அரசுப்‌ பணிகள்‌

பகுதி 14 (உட்பிரிவு 323ஏ மற்றும்‌ 323 பி)
-      ஒன்றிய அரசின்‌ தீர்ப்பாயங்கள்‌.




பகுதி 15 (உட்பிரிவு 324-329)
-      தேர்தல்கள்‌, தேர்தல்‌ ஆணையம்‌.

பகுதி 16 (உட்பிரிவு 330-342)
-      பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள்‌ பற்றி.

பகுதி 17 (உட்பிரிவு 343-351)
-      அலுவல்‌ மொழி, வட்டார மொழி,நீதி மன்றங்களில்‌ மொழி.




c

பகுதி 18 (உட்பிரிவு 352-360)
-      அவசர நிலைக்கானது பிரகடனம்‌ (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367)
-      இதர (இதில்‌ குடியரசு தலைவர்‌, ஆளுநர்‌ இந்தப்‌ பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும்‌ சில)

பகுதி 20 (உட்பிரிவு 368)
-      இந்திய அரசமைப்புச்‌ சட்டம்‌ திருத்தம்‌ அதற்கான நடைமுறை.






பகுதி 21 (உட்பிரிவு 369-392)
-      தற்காலிக, இடைநிலை மற்றும்‌ சிறப்பு ஒதுக்கீடுகள்‌

பகுதி 22 (உட்பிரிவு 392-395)
-      குறுகிய தலைப்பு, ஆரம்பம்‌ தேதி, இந்தி மற்றும்‌ ரிப்பீல்ஸில்‌ அதிகாரப்பூர்வ உரை.





Post a Comment

0 Comments