யார் இந்த பாண்டுரங்க சதாசிவ சானே அவர் நாட்டிற்கு ஆற்றிய தொண்டு என்ன ?

👉 சுதந்திரப் போராட்ட வீரரும் படைப்பாளியுமான பாண்டுரங்க சதாசிவ சானே 1899ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பம்பாயிலுள்ள பால்கட் என்ற கிராமத்தில் பிறந்தார்.

👉 அமால்னர் நகரில் உள்ள பிரதாப் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர். 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டி யாத்திரையைத் தொடங்கிய வேளையில் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவர் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்துகொண்டார்.

👉 சிறந்த படைப்பாளியான இவர் மொத்தம் 135 நூல்களை எழுதியுள்ளார். இவரது ஸ்யாமசி ஆயீ என்ற படைப்பு இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளை மராத்தியில் மொழிபெயர்த்துள்ளார்.

👉 மாணவர்கள் இவரை சானே குருஜி என இவரைப் போற்றினர்கள். தேசத்தின் குரு என போற்றப்பட்ட பாண்டுரங்க சதாசிவ சானே 1950ஆம் ஆண்டு மறைந்தார்.


Post a Comment

0 Comments