புதிய Biometric வருகையினை இந்த மாதத்துக்குள் நடைமுறைபடுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

   RD Serivce Driver uninstall செய்துவிட்டு புதிய RD Service Driver install செய்து 30.12.2019க்குள் புதிய Biometric வருகை நடைமுறைபடுத்த வேண்டும். Biometric சார்ந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்..!



Biometrics - RD Service Driver Installation Guide -  Click here to Download



    அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி மூலமா வருகைப் பதிவேடு முறைமை ( AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System ) நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது . பார்வை 2ல் காண் சென்னை 90 , தேசிய தகவலியல் மைய கடிதத்தில் UIDAI Certificate used to encrypt PID block in Authentication request is going to expire by 30 " December 2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது .

     எனவே சென்னை 6 , சிந்தாதிரிப்பேட்டை , ஐ போக்கஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ( Startek FM 220 Model ) மற்றும் அகமதாபாத் , மந்த்ரா சாப்ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து ( Iris Scanner and MFS 100 Fingerprint Device ) கொள்முதல் செய்யப்பட்ட ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவிகள் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் கருவிகள் மூலம் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 30 . 12 . 2019 அன்றுடன் மேற்கண்ட கருவிகளுக்கான UIDAI நிறுவனத்தாரால் வழங்கப்பட்டுள்ள RD Service காலாவதியாவதால் 31 . 12 . 2019 முதல் தொட்டுணர் கருவிகள் மூலம் வருகைப் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால் , இன்று ( 25 . 12 . 2019 ) மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தத்தமது ஆளுகைக்குட்பட்ட கல்வி அலுவலகங்கள் / அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொட்டுணர் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி அல்லது மடி கணினியில் ஏற்கனவே உள்ள RD Service Driverஐ மட்டும் நீக்கம் செய்துவிட்டு ( Uninstall ) New RD Service Driverஐ ( install ) உட்புகுத்தி தொடர்ந்து தொட்டுணர் கருவிகள் மூலமான வருகை பதிவினை மேற்கொள்ள உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .



   தேசிய தகவலியல் மையத்திடமிருந்து பெறப்பட்டுள்ள மின்னஞ்சலை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இவ்வியக்ககத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது அதனை பின்பற்றியும் , மேலும் New RD Service Driverஐ உள்ளீடு செய்வதில் ஏதேனும் தெளிவுரை வேண்டப்பட்டால் மந்த்ரா நிறுவனம் மற்றும் ஐ போக்கஸ் நிறுவனங்களை தொடர்பு கொண்டு இப்பணியினை உடன் முடிக்குமாறும் மற்றும் பணிநிலைக்கு கொண்டுவரப்பட்ட அறிக்கையினை இவ்வியக்கக இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களுக்கு தபால் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறத்தப்படுகிறது .

    தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பினும் அவசரம் கருதி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் போர்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி தத்தமது மாவட்டத்தில் பயிற்சி பெற்றுள்ள அனைத்து KRPகளை கொண்டும் இப்பணியினை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.







 .

Post a Comment

0 Comments