புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
விடுமுறை என்றாலே பள்ளி குழந்தைகள் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை அனைவருக்கும்
ஹேப்பி நியூஸ் தான். அந்த வகையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை (அக்டோபர் 1)
கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (அக்.2) சரஸ்வதி பூஜை, தசரா, காந்தி
ஜெயந்தி, கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை கொண்டாடப்படும் அக்டோபர் 1-ம் தேதியான புதன்கிழமை, அக்டோபர் 2-ம்
தேதியான வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
அக்டோபர் 3-ம் தேதியான வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் சனி, ஞாயிறு
சேர்த்து 5 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்தநிலையில்,
புதுச்சேரியில் நாளை 03-102025 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்களில்
பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை தொடர்
விடுமுறையை அடுத்து நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0 Comments