கடலூர் துறைமுகத்தில் 2 எண் எச்சரிக்கை கூண்டு., பள்ளிகள் விடுமுறை!

    கடலூர் துறைமுகத்தில் 2 எண் எச்சரிக்கை கூண்டு., பள்ளிகள் விடுமுறை!
Click here to Download

‘மோந்தா’ புயல் நெருங்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் துறைமுகத்தில் இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தவிர்த்துள்ளனர்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு தற்போது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அது மத்திய மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அதாவது செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவு நேரத்தில், ‘மோந்தா’ புயல் ஆந்திரா மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிகங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடா அருகே கரையை கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 110 கிலோமீட்டர் வரை வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை மாநிலம் ஏனாம், காக்கிநாடாவிலிருந்து 32 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளதால், புயலின் தாக்கம் அப்பகுதியிலும் உணரப்படும் வாய்ப்புள்ளது.

ஏனாம் மண்டல நிர்வாகி அங்கித் குமார் தெரிவித்ததாவது, ‘புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 0884-2321223, 2323200 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என கூறியுள்ளார்.

புயல் முன்னெச்சரிக்கையாக, ஏனாமிலுள்ள பள்ளிகள் அனைத்தும் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், இன்று முதல் புதன்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லவும், சுற்றுலா படகு பயணங்களும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன.

'மோந்தா' புயல் காரணமாக ஏனாமில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அக்டோபர் 27 முதல் 29 வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

0 Comments