100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு செப். 7-ல் பாராட்டு
v
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 12, 10-ம்
வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவிபெறும்
பள்ளிகளுக்கும், தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற
மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சியில் செப்.
7-ல் நடைபெறவுள்ளது.
திருச்சி காட்டூரில் உள்ள மான்போர்ட் பள்ளியில் செப். 7-ம் தேதி காலை 9.30
மணிக்கு நடைபெறவுள்ள விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி தலைமை
ஆசிரியர்கள், மாணவர்கள், உரிய அடையாளச் சான்றுடன் வருவதற்கு ஏற்பாடு
செய்ய வேண்டும்.

0 Comments