CPS கணக்கு தாள் 07/07/2025 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் -
கருவூல கணக்கு த்துறை அறிவிப்பு.

CPS ஓய்வூதிய திட்ட ஊழியர்களின் 2024- 25 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய
கணக்கு தாள் 07/07/2025 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என கருவூல கணக்கு
த்துறை அறிவிப்பு.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப்
பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 07.07.2025 அன்று காலை 10
மணிக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரகத்தால் ( பங்களிப்பு ஓய்வூதியத்
திட்ட பிரிவு ) வெளியிடப்படுகிறது . அத்துறையின் http://cps.tn.gov.in/public
மற்றும் www.karuvoolam.tn.gov.in ( களஞ்சியம் ) பணியாளர் சுய சேவை ( Employee
Self Sarvice ) என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் ,
பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தின் தொகையினை களஞ்சியம் கைப்பேசி செயலி மூலமும்
தெரிந்து கொள்ளலாம் .

0 Comments