TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்
சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஒருமுறை
பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில்
உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முற்பகல் தமிழக அரசில் காலியாக
உள்ள 2,540 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான கொள்குறி வகையிலான
ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம்
பேர் எழுதினர். இதில் 29 ஆயிரத்து 809 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி
பெற்றனர்.
அவர்களுக்கு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பிற்பகல் முதன்மைத் தேர்வின் தமிழ்
தகுதித்தாள் தேர்வும் மற்றும் கொள்குறி வகையில் விடை அளிக்கும் பொது அறிவு
மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் தேர்வு நடைபெறும் எனவும்,
விரிவான விடை அளிக்கும் வகையிலான பொதுஅறிவுத் தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி
முற்பகல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்
தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in - இல்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலம் விண்ணப்ப எண்
மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments