தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு...!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொது தேர்வு நடைபெற உள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த மார் ஒன்னாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து பொது தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனைப் போலவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பொது தேர்வு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் போது மற்ற மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மட்டும் தேர்வு நடைபெறும் நேரத்தில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments