12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெறும் என தகவல்

12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெறும் என தகவல்

தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தற்போது நடத்துவது சரியாக இருக்காது என சுகாதாரத் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

  • தமிழகத்தில் மிக வேகமாகப் பரவும் கொரோனா
  • பனிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரிக்கை
  • ஆகஸ்ட் மாதம் வரை இந்த நிலை தொடரும் என தகவல்

கொரோனா பரவலில் இரண்டாவது அலை இவ்வளவு வீரியமாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்களே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். நாடு முழுவதும் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக பத்து நாள்களில் உயர்ந்துள்ளது.

தமிழகத்திலும் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தபோது எட்டப்படாத உயரத்தை கடந்து பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் சென்று கொண்டிருக்கிறது.

இரண்டாவது அலையில் குழந்தைகளும், இளையோரும் அதிகளவில் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது சரியாக இருக்காது என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. தேர்வை ரத்து செய்யவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது குறித்து முடிவெடுப்பதற்காக நேற்று (ஏப்ரல் 15) தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ் குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தமிழ் நாட்டில் ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா தீவிரமாக இருக்கும். எனவே, பிளஸ் 2 தேர்வை நடத்துவது சரியாக இருக்காது என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், நோய்த்தொற்று அச்சத்துக்கு இடையே தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என கல்வித் துறையும் சுட்டிகாட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் மாதத்துக்கு மேல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

1 Comments

  1. Kindly don't cancel the board exam just postpone the exam

    ReplyDelete