பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், ஜூனில், NEET தேர்வுக்கான இலவச பயிற்சி

    பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், ஜூனில், 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சியை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு வழங்கி உள்ளது.

    இந்த இட ஒதுக்கீட்டில் சேர, மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதன் காரணமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு, மே 3 முதல் 21 வரை நடக்கிறது. இந்தத் தேர்வு முடிந்ததும், 'ஆன்லைன்' வழியிலும், நேரடி வகுப்பாகவும், இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஜூனில் இந்த பயிற்சியை முழு வீச்சில் நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.



Post a Comment

0 Comments