9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு விதிமுறைகள் சிபிஎஸ்இ வெளியீடு

9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு விதிமுறைகள் சிபிஎஸ்இ வெளியீடு

மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும் 9 மற்றும் 11 ஆம் மாணவர்களுக்கான தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தேர்வு விதிமுறைகள்:
தமிழகத்தில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதியும், 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் பிப்ரவரி 8 ஆம்
தேதியும் திறக்கப்பட்டன. 

சிபிஎஸ்இ சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் அனைத்து சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை, “மாணவர்களுக்கு பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாத நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் கல்வியில் ஏற்பட்டுள்ள இடைவெளியை முதலில் சரி செய்து பிறகு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு 2021-22 ஆம் கல்வியாண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை மாநில அரசின் அனுமதியுடன் துவக்கலாம்”, இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் கட்டாயம் கொரோனா விதிகளை பின்பற்றி தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments