1 முதல் 5ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

1 முதல் 5ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிகள் திறப்பு தாமதம்:
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் போன கல்வியாண்டில் பெரும்பாலான வகுப்புகளுக்கு இறுதி தேர்வுகள் கூட நடத்தப்படவில்லை. 

நடப்பு கல்வி ஆண்டையும் வழக்கம் போல் ஜூன் மாதத்தில் தொடங்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

பாடத்திட்டம் குறைப்பு:
பள்ளிகளில் அதிக அளவிலான நேரடி வகுப்புகள் நடக்காததால் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பாடத்திட்டம் குறிப்பிட்ட அளவில் குறைக்கப்பட்டது. இதனால் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தை குறைப்பதற்கு கோரிக்கைகள் எழுந்தது. 

இந்நிலையில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு தமிழகத்தில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இதனையே புதுச்சேரியிலும் பின்பற்றலாம். மேலும், 1-5ம் வகுப்புகளுக்கும் பாடங்களை குறைத்து புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் :
இது தொடர்பாக புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ர கவுடு அவர்கள் பள்ளிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 

குறைக்கப்பட பாடங்கள் வகுப்பு வாரியாகவும், பாடங்கள் வாரியாகவும் விவரமாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் இதன்படியே பாடங்களை நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments