ஏழு தேர்வுக்கான 'ரிசல்ட்'; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

ஏழு தேர்வுக்கான 'ரிசல்ட்'; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
'குரூப் - 2' உட்பட அரசு துறை பணிகளுக்கான ஏழு வகை தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

'குரூப் - 2' நேர்காணல் தேர்வு உள்ள பதவிகளில் 1334 காலியிடங்களை நிரப்ப 2019 பிப்ரவரி 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 19ல் நேர்காணல் நடத்தப்படும்.

தமிழக தகவல் தொழில்நுட்ப துறையில் உதவி கணினி ஆய்வாளர் பணியில் 60 பணியிடங்களை நிரப்ப 2019 ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களின் மதிப்பெண் தரவரிசை வெளியிடப்பட்டு உள்ளது

கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 19 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் பள்ளி கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலரான டி.இ.ஓ. பதவியில் 20 இடங்களை நிரப்பும் தேர்வுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான நலன் சார்ந்த நிறுவனத்தில் திட்ட அலுவலர் தமிழ்நாடு சிறைப்பணி உதவியாளர் தொல்லியல் துறை அலுவலர் உள்ளிட்ட தேர்வுகளின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
விபரங்களை டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த முடிவுகள் வழியே மொத்தம் 1455 காலியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments