TNSCERT and கல்வி தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 வீடியோ பாடங்கள் தயார்நிலையில் உள்ளது

    பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் , அனைத்து டிஇஓ - க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


      முழு ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறையின் வீட்டு - பள்ளி திட்டத்தின்கீழ் பிளஸ் 2 ல் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் லேப்டாப்புக்கு முதல்கட்டமாக 136 காணொளிகள் ' ஹை - டெக் லேப் மூலம் பதிவிறக்கம் செய்துதரப்பட்டது.


     அதனைத் தொடர்ந்து தற்போது 2 ம் கட்டமாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , கல்வி தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 வீடியோ பாடங்கள் தயார்நிலையில் உள்ளது. முதுகலை ஆசிரியர்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தங்கள் பள்ளியில் மேற்கண்ட பாடங்கள் சார்ந்த பிரிவு மாணவர்களை அழைத்து அவர்களின் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்துதர வேண்டும் . ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவர்கள் என சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் . வீடியோ பாடங்கள் லேப்டாப்பில் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .


Post a Comment

0 Comments