ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகங்களை விநியோகிக்க பரிசீலனை

    1 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 1.98 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து80 சதவீத பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன.

         முழுஊரடங்கு அமலில் உள்ளசென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு, நிலைமை சீரானதும்ஜூலை 2-ம் வாரத்தில் புத்தகம்அனுப்பப்படும். மேலும், ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகங்களை விநியோகிக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

      அதேபோல், தனியார் பள்ளிகளுக்கான 1.95 கோடி விற்பனை புத்தகங்களும் அந்தந்த மாவட்ட மைய குடோன்களுக்கு அனுப்பப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும், அனைத்துவகுப்புகளுக்கான பாடநூல்கள்பள்ளிக்கல்வி இணையதளத்தில் (tnschools.gov.in/textbooks) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.​மேலும், https://e-learn.tnschools.gov.in/ என்ற அரசு இணையதளத்தில் பாடங்கள் வீடியோ வடிவிலும் பதிவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments