மாநில அரசு அதிரடி முடிவு, பள்ளிகளை திறக்க....

மாநில அரசு அதிரடி முடிவு, பள்ளிகளை திறக்க....
  அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்த தொடங்கிவிட்டன. ஆனால் அரசு பள்ளிகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பள்ளிகளில் போதிய சுகாதார நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து மாணவர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆந்திர மாநில அரசு எடுத்துள்ளது முடிவு குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

விடாமல் துரத்தும் கொரோனா
   நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எந்தவொரு நடவடிக்கையும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் தான் நிலவுகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கால் தொடர்ந்து 5 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
பள்ளிகள் திறப்பு எப்போது?

 மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்வி நிலையங்களுக்கு வரவழைத்து வைரஸ் தொற்று ஏற்படாமல் பாடம் கற்றுத் தருவது சவாலான காரியம். இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவொரு மாநிலமும் முடிவெடுக்காமல் இருந்து வருகின்றன. இந்த சூழலில் ஆந்திர மாநிலம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் தகவல்

  வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவலின் நிலையைக் கருத்தில் கொண்டு தேதியில் மாற்றம் வரலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநில கல்வித்துறை அமைச்சர் அடிமுலாபு சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
செப்டம்பர் 5ல் திறப்பு
  அவர் பரிந்துரையின் படி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு முதலில் உடற்பயிற்சி வகுப்புகள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் அப்போதைய சூழலை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது கொரோனா நோய்த் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதிகளில் மாற்றம் வரலாம்.
புதிய அறிவிப்புகள்

   அதுவரை ரேஷன், மதிய உணவு ஆகியவற்றை மாணவர்களின் வீட்டிற்கே  சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த கூட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் கல்வியை மேம்படுத்த மாவட்ட அளவில் இணை இயக்குநர் பதவிகளை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வியை முறையாக அமல்படுத்தும் வகையில் மாநில அளவில் இரண்டு இயக்குநர் பதவிகள் மற்றும் ”ஜெகனன்னா கொருமுட்டா” மதிய உணவு திட்டம் ஆகியவற்றை கொண்டு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ப்ரீ பிரைமரி வகுப்புகள்
    அதேசமயம் ஒவ்வொரு மண்டலங்களிலும் அரசு ஜூனியர் கல்லூரிகளை கட்டமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு முதல் ப்ரீ பிரைமரி வகுப்புகளான எல்.கே.ஜி, யூ.கே.ஜி-யை அரசு பள்ளிகளில் தொடங்க மாநில அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டத்தை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு கொண்டு வர ஆந்திர அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் ஜூனியர் அரசு கல்லூரிகளில் AP EAMCET, JEE, IIIT உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments