பிளஸ் 2வில் ஒரு பாடத்துக்கு, தேர்வை எழுதாமல் விட்டவர்களுக்கு, நாளை மறு தேர்வு

     பிளஸ் 2வில் ஒரு பாடத்துக்கு, தேர்வை எழுதாமல் விட்டவர்களுக்கு, நாளை மறு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 24ல் பொது தேர்வு முடிந்தது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு, மார்ச் 24ல் அறிவிக்கப்பட்டது.அதனால், சில மாணவர்கள் மார்ச் 24ம் தேதி தேர்வை எழுதவில்லை. அந்த வகையில் 36 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, தேர்வு துறை சார்பில், மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

    மொத்தம் 780 மாணவர்கள் மட்டுமே, தேர்வை எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கான மறுதேர்வு, நாளை தமிழகம் முழுவதும் நடக்கிறது.விருப்பம் தெரிவித்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலேயே தேர்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments