2020-2021ஆம்‌ கல்வியாண்டில்‌ வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின்‌ எண்ணிக்கை குறித்த விவரம்‌ கோருதல்‌

     பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - விலையில்லா பாடநூல்கள்‌ -அரசு/அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 10ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ மாணவியர்களுக்கு 2020-2021ஆம்‌ கல்வியாண்டில்‌ வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின்‌ எண்ணிக்கை விவரம்‌ கோருதல்‌ -சார்பு.


     தமிழகத்தில்‌ அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 10 ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ மாணவியர்களுக்கு 2020-2021 ஆம்‌ கல்வியாண்டில்‌ வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின்‌ எண்ணிக்கை விவரத்தினை படிவம்‌ 1ல்‌ குறிப்பிட்டுள்ளவாறு தலைமையாசிரியர்களிடமிருந்து பெற்று, அதனை தொகுத்து படிவம்‌ 2ல்‌ பூர்த்தி செய்து படிவம்‌ 2 -னை மட்டும்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலரின்‌ கையொப்பத்துடன்‌ esec.tndse@nic.in மற்றும்‌ dsetamilnadu@gmail.com ஆகிய மின்னஞ்சல்‌ முகவரிக்கு 22.07.2020 புதன்‌ கிழமை பிற்பகல்‌ 2.௦௦ மணிக்குள்‌ அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும்‌ கேட்டுகொள்ளப்படுகிறார்கள்‌.






Post a Comment

0 Comments