ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

     அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது, 59 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், ரத்து செய்யப்படலாம்' என, தகவல் வெளியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், விருப்ப இடமாறுதல் வழங்கப்படும். இதற்காக, மாநில அளவில், ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.

       இந்த கவுன்சிலிங், ஆண்டுதோறும் புதிய கல்வி ஆண்டு துவங்கும் முன், மே மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு, ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் திறப்பும், புதிய கல்வி ஆண்டு பணிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கும், அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது, 59 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இந்த ஆண்டு ஓய்வு பெறவில்லை. 

   அவர்கள் ஓய்வு பெறுவது ஓராண்டு தள்ளி போயுள்ளது. அதனால், காலியிடங்கள் ஏற்படவில்லை. இதன் காரணமாக, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கை தள்ளி வைக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Click here to Download G.O

Post a Comment

0 Comments