பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    ''பத்தாம் வகுப்பு தேர்வர்கள் வசதிக்காக, 22 வழிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடில் நேற்று அவர் அளித்த பேட்டி:


    தமிழகம் முழுதும், ஜூன், 15ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும். தேர்வர்கள் வசதிக்காக, 'இ - பாஸ்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. எந்த சிரமமும் இன்றி தேர்வர்கள், இ - பாஸ் பெறும் வழிமுறைகள் குறித்து, சுற்றறிக்கை தயார் செய்து உள்ளோம்.



    அதில், தேர்வரின் வசதிக்காக, பஸ் போக்குவரத்து, இ - பாஸ் முறை, அடையாள அட்டை என, மொத்தம், 22 வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுத்தேர்வு முடிந்த பின்,தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். தேர்வர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

   மாணவர்களின் ஆரோக்கியத்துக்காக, தேர்வு மையங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளன. முதலில், 3,684 மையங்கள் இருந்தன. இப்போது, மூன்று மடங்கு உயர்த்தி, 12 ஆயிரத்து,674 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.



Post a Comment

0 Comments