கொரோனா முன்னெச்சரிக்கை - ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் விபரம்

கொரோனா முன்னெச்சரிக்கை - ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் விபரம்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 5 ஆம் தேதி குரூப் 1 முதனிலைத் தேர்வு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தீவிரமானதைத் தொடர்ந்து இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாக இந்த தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுகிறது. இதே போல் உரிமையியல் நீதிபதி பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி (TNPSC Civl Judge Exam 2020) தேர்வு வரும் 28,29 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

    பிளஸ் டூ தகுதி பெற்றவர்கள், மத்திய அரசுப் பணியில் சேருவதற்கான SSC தேர்வுகள், கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே போல், இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான SSC JE Tier 1 தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக முதனிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த மார்ச் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக மார்ச் 31 ஆம் தேதி முதன்மைத் தேர்வுகள், அதாவது மெயின் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மார்ச் 31 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த RBI Assistant Main 2020 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாக இந்த தேர்வு எப்போது நடைபெறும் என்பது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

  இந்திய விமானப்படையில் காலியாக உள்ள ஏர்மென் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மார்ச் 19 முதல் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரானோ வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாக ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில், ஏர்மென் பணிக்கான தேர்வு நடைபெறும் என்று மத்திய ஏர்மென் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


   இந்திய ராணுவத்தில் உள்ள காலியிடங்கள் SSB (Indian Army Service Selection Board) தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது மார்ச் 20 ஆம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த அனைத்து SSB தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது. முன்னதாக லடாக் பகுதியில், 34 வயது ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு தென்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Delhi Subordinate Services Selection Board (DSSSB) எனப்படும் டெல்லி தேர்வாணையம், இன்ஜினியர் பணிக்கான தேர்வு நடத்த இருந்தது. சிவில், சுற்றுச்சூழல் இன்ஜினியர் ஆகிய பணிக்கான இரண்டாம் நிலைத் தேர்வு மார்ச் 30 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.


   இந்த தேர்வு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான காரணம் கொரானோவைரஸ் இல்லை என்றும், நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேதிகள் (Revised Date) பின்னர் அறிவிக்கப்படும்.

     விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில், மேனேஜ்மென்ட் டிரேய்னி (Management Trainee) பணிக்கான கணினி வழித் தேர்வு மார்ச் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வும் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை, www.vizagsteel.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கான தேர்வு தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.


   இந்தோ திபெத்தியன் பாதுகாப்பு படையில், கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வு மார்ச் 22 ஆம் தேதி நடைபெற இருந்தது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக கான்ஸ்டபிள் பணி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ITBP செய்தித் தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே அறிவித்துள்ளார்.

   மேலும், புதிய தேர்வு தேதி விவரங்கள், விண்ணப்பதாரர்களு்கு SMS மூலம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான சந்தேகங்களுக்கு 011-24369482; 011-24369483 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

    Haryana Staff Selection Commission (HSSC) என்பது ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகும். இந்த தேர்வாணையம் மூலம் அசிஸ்டெண்ட் லைன் மேன், இன்ஸ்ட்ரக்டர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போது ஆட்கள் தெரிவு செய்யும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


   டெல்லியைப் போல், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அரசுப் பணிக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், ஜூனியர் கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கை அறிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கான தேர்வு மார்ச் 118 முதல் 26 ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா எதிரொலியாக இந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி வரையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments