கொரோனா நிவாரண நிதியாக ரூ.5,280 கோடி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு - PDF

கொரோனா நிவாரண நிதியாக ரூ.5,280 கோடி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு - PDF

CLICK HERE TO DOWNLOAD G.O PDF


G.O Ms.No. 152 Dt: March 23, 2020 Corona Virus Disease (COVID-19) – Infection Prevention and Control – The Epidemic Diseases Act, 1897 (Central Act No.3 of 1897) – Regulations – Notification - Issued.


   உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 18,907 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஒருவர் மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார். இதற்கிடையே, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அதிமுக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

   23ம் தேதி தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நான் பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ், சென்னையில் காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் கலெக்டர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளனர். இவ்வாணைகள் அனைத்தும் இன்று(நேற்று) மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க அதிமுக அரசு முடிவு செய்து, ரூ.3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகள் வழங்கப்படும். அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000 நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா 1,000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் 1,000 உடன் கூடுதலாக 1,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்களுக்கு 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணை வெளியிடப்படதையடுத்து விரைவில் குடும்ப அட்டைகளுக்கு பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது


Post a comment

0 Comments