வழங்கப்பட்ட மடிக்கணினிகள் போக இருப்பிலுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையை தெரிவிக்க உத்தரவு.

      2018 - 19 மற்றும் 2019 - 2020 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் போக இருப்பிலுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையை தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.




IMG_20191228_112853






IMG_20191228_112904


IMG_20191228_112913






         2017 - 2018 மற்றும் 2018 - 2019 - ம் ஆண்டுகளில் + 2 பயின்று தேர்ச்சிப் பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு , அவர்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரி / நிறுவனங்களிலிருந்து உயர்கல்வி பயின்று வருவதற்கான சான்றினை ( Bonafide Certificate ) பெற்று பள்ளிகளில் வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் மடிக்கணினிகள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து , பார்வை 2 - ல் காண் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் மேற்கண்டவாறு மடிக்கணினிகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது . பார்வை 3 மற்றும் 4 - ல் குறிப்பிட்ட அரசுத் தலைமைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் , தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி 2017 - 2018 மற்றும் 2018 - 19 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருவதற்கான சான்றினை ( Bonafide Certificate ) பெற்று தாங்கள் பயின்ற பள்ளிகளில் 11 . 01 . 2020 - ற்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் . இதற்குப் பிறகு பிறகு எக்காரணம் Bonafide Certificate ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது . எனவே , 11 . 01 . 2020 - க்குள் அனைத்து மாணவர்களும் Bonafide Certificate ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

2 . 2018 - 19 - ம் கல்வியாண்டில் + 2 பயின்ற மாணவர்கள் தங்களுடைய Bonafide Certificate ஐ பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டவுடன் பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய மாணவனுக்கு மடிக்கணினி உடனே வழங்கப்படவேண்டும் .

3 . 2017 - 18 ஆம் கல்வியாண்டில் + 2 பயின்ற மாணவர்கள் தங்கள் கல்லூரியில் Bonafide Certificate பெற்று பள்ளிகளில் 11 . 01 . 2020 - க்குள் எத்தனை மாணவர்கள் ஒப்படைத்துள்ளனர் என்பதை பள்ளிவாரியாக கணக்கிடப்பட வேண்டும் .

4 , 2018 - 19 மற்றும் 2019 - 2020 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் போக பள்ளி வாரியாக இருப்பிலுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையை சரிபார்த்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் .

5 . 2017 - 2018 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களில் எத்தனை மாணவர்கள் Bonafide Certificate 11 . 01 . 2019 வரை பள்ளிகளில் ஒப்படைத்துள்ளனர் என்பதை பள்ளிவாரியாக கணக்கிடப்பட வேண்டும் .

பள்ளிவாரியாக கணக்கிட்டு , இருப்பிலுள்ள மடிக்கணினிகளை கழித்துக் கொண்டு 2017 - 2018 - ம் ஆண்டிற்கு 11 . 01 . 2020 வரை ஒப்படைக்கப்பட்ட Bonafide Certificate அடிப்படையில் தேவைப்பட்டியலை இவ்வியக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் . 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் இருப்பில் உள்ள மடிக்கணினிகள் எண்ணிக்கையினை ( 2018 - 19 மற்றும் 2019 - 20 ஆகிய வருடங்களில் மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினிகள் போக ) " Bonafide Certificate " ன் அடிப்படையில் கழித்து இன்னும் தேவைப்படின் தேவைப்பட்டியல் அல்லது கூடுதலாக இருப்பின் அதன் விவரத்தினையும் , பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பள்ளிவாரியாக பெற்று தொகுத்து இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி 13 . 01 . 2020க்குள் இவ்வலுவலக V2sec . tndse @ nic . in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு தவறாமல் அனுப்பிவிட்டு முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பமிட்ட பிரதியினை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறும் கூடுதல் தேவை அல்லது இருப்பு ஏதுமில்லை எனில் இன்மை அறிக்கையினை கண்டிப்பாக அனுப்பி வைக்கவும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட அன்றே EMIS மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் . எனவே , இதன் மீது தனிக்கவனம் செலுத்தி 100 சதவீதம் EMIS பதிவு மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்




Post a Comment

0 Comments